Putham Puthiya Aandu Lyrics - Selvin Samuel
Putham Puthiya Aandu Lyrics - Selvin Samuel
Lyrics:
புத்தம் புதிய ஆண்டு புத்தம் புதியநாள்
கிருபையால் தேவன் தந்தது
புத்தம் புதிய வாழ்வு புத்தம் புதியநாள்
கிருபையால் தேவன் தந்தது
இந்த கிருபைதான் இதுவரை நடத்தியது
தேவ கிருபைதான் இனியும் நடத்திடுமே
1.கடுகளவும் குறைவின்றி காத்து பார்த்து வந்தீர்
கண்ணீரின் பாதையில் கண்மணி போல் காத்தீர் 2
இதுவரை நடத்தினீர்,இனியும் நடத்திடுவீர்
இதுவரை சுமந்திட்டீர் இனியும் சுமந்திடுவீர்-புத்தம்
2.வருசத்தை நன்மையினால் முடிசூட்டுபவரே
வல்லமையால் வரங்களினால் நிரப்பியே அனுப்பிடுமே 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை நிரப்பினீர் இனியும் நிரப்பிடுவீர்-புத்தம்
3.வாக்குறைத்து வழுவாமல் இதுவரை வனைந்தீரே
வார்த்தையினால் வசனத்தால் வாழவைத்தீரே -2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை தாங்கினீர் இனியும் தாங்கிடுவீர் - புத்தம்
4.புல்லுள்ள இடங்களிலே நிறைவாய் போஷித்தீரே
புதுகிருபை புதுபெலத்தால் புதுமையாய் நிறுத்திடுமே- 2
இதுவரை நடத்தினீர் இனியும் நடத்திடுவீர்
இதுவரை போஷித்தீர் இனியும் போஷிப்பீர்.. புத்தம்
Lyrics, Composed & Sung by SELVIN SAMUEL
Featuring:
BENNY JOHN JOSEPH
BEN SAMUEL
PRAISY MELONSHIA
Putham Puthiya Aandu Song - Selvin Samuel

Social Plugin